தமிழர் வரலாற்றில் பல்வேறு கலைகளும் இடம் பெறுகின்றன. அவற்றில் ஆடல் வகையும் ஒன்றாகும். பதினோர் வகை ஆடல்கள், ஆடப்படும் இடங்கள், ஆடப்படும் வேளையில் கைக் கொள்ளும் பொருட்கள், ஆடல் பொருளின் நோக்கம் என்று ஆடலின் வரையறைகள் நீள்கின்றன. ஆடல் கலையினை மாதவியின் வழியாக சிலப்பதிகாரம் மிக விரிவாக எடுத்துரைக்கிறது.