இலக்கியங்கள் மனித சமூகத்தின் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன. அதனோடு மனிதனைப் பண்படுத்தும் மகத்தான பணியையும் இலக்கியங்கள் காலம் தோறும் மேற்கொண்டு வருகின்றன. மனித எண்ணங்கள் வாழ்க்கை கூறுகளில் வெளிப்பட்டு, பண்பாடாக நிலை பெறுகின்றன. அந்த வகையில் தமிழ் இலக்கியத்தில் காணலாகும் பண்பாட்டு மாண்புகளை இக்கட்டுரை ஆராய்கிறது.