மூலநூலிற்கு உரை வரையும் உரையாசிரியர்கள் இருவேறு காலச்சூழலுக்குள் உழல்கின்றனர். ஆசிரியரின் கருத்தை விவரித்து உரைப்பதற்கு தம் காலச்சூழலை ஒட்டி எடுத்துக்காட்டுகளைக் கூறித் தெளிவுபடுத்துகின்றனர். அவற்றில் தாய்க்கொலை என்ற சொல்லடைவு கவனத்திற்குரியதாக அமைகின்றது. தாய்வழிச் சமூகம்இ தந்தைவழிச் சமூகம் என்ற சமூககோட்பாட்டின்படி தாய்க்கொலை என்பது கணவாழ்விலிருந்து விடுபட்டு அரசுரிமை பெறமுயலும் சமூகத்தின் எத்தனிப்பைக் காட்டுகின்றது. தாய் மகன் உறவுநிலை குறித்த சமூக அமைப்பினையும் இலக்கணவிதியையும் உரையாசிரியர்களின் வழி ஆய்வதாக இக்கட்டுரையின் கருதுகோள் அமைகின்றது.