தமிழ் மொழியானது நீண்ட, நெடிய வரலாற்றினை உடையது போலவே சமணர்களின் தமிழ்ப்பணியும் நீண்ட, நெடிய வரலாற்றினை உடையது. சமணர்களின் தமிழ்ப்பணி அளப்பரியது. சமணர்கள் மிகுந்த அறக்கருத்துக்களை வழங்கியுள்ளனர். இலக்கண நூல்களையும் பா வகையினையும் தமிழுக்கு வழங்கியுள்ளனர். சமணர்களை தமிழ் வரலாற்றில் பதிவிட வேண்டியது முதன்மையானதாகும்.