கண்களிலொரு பெரிய கடல் (கவிதைகள்) - மாணவர்கள் நா.மைதீன், இரா.அன்புச்செல்வன்
தேவகோட்டை தே பிரித்தோ மேனிலைப் பள்ளியின் அமுதவிழா (80 ஆம் ஆண்டில்) வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றத்தின் 15 ஆவது வெளியீடாக பன்னிரண்டாம்வகுப்பு மாணவர்கள் நா.மைதீன், இரா.அன்புச்செல்வன் கவிதை நூல் அகநி வெளியீடு பதிப்பகத்தின் மூலம் வெளியிடப் பெற்றுள்ளது.
மாணவ ஓவியர்கள் இரா.அன்புச்செல்வன், விகாஸ், ஆதவன், ரூபன் ஆகியோர் ஓவியங்கள் வரைந்துள்ளனர். ஓவிய ஆசிரியர் திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் அட்டைப்படம் வரைந்துள்ளார்.
சாகித்திய அகாதெமியின் பாலபுரஸ்கார் விருதுபெற்ற எழுத்தாளர், இந்துதமிழ்திசை முதுநிலை உதவி ஆசிரியர் கவிஞர் மு.முருகேஷ், திரைப்பட இயக்குநரும் பாடலாசிரியருமாகிய கவிஞர் ஏகாதசி, தமிழ்நாட்டரசின் விருதுபெற்ற இயக்குநர், ஊடகவியலாளர் மருத்துவர் தமிழ்சிலம்பரசன், சிவகங்கை மாவட்ட முதன்மைக்கல்விஅலுவலர் பாலுமுத்து, பள்ளியின் அதிபர் & பிரித்தோ இல்ல இயக்குநர் அருட்பணி பாபுவின்சென்ட்ராஜா சே.ச ஆகியோர் அணிந்துரை, வாழ்த்துரை எழுதியுள்ளனர்.
வீரமாமுனிவர் கலை இலக்கிய மன்றச் செயலாளர் முனைவர் ம.ஸ்டீபன் மிக்கேல் ராஜ் நூல் வெளியீட்டிற்கான பணிகளைச் செய்துள்ளார்.