அறப்போர்

2017-09-05T18:44:25Z (GMT) by Praveen PA
சங்கநூற் காட்சிகள் என்ற வரிசையில் இது ஐந்தாவது புத்தகம். இதற்குமுன் வந்த நான்கும் அகப்பொருளைப் பற்றியவை. இது புறப்பொருளைப் பற்றியது. ஆகவே அந்தப் புத்தகங்களில் உள்ள கட்டுரைகளின் போக்குக்கும் இதில் உள்ள விளக்கங்களின் போக்குக்குமிடையே சில வேறுபாடுகள் இருக்கக் காணலாம். செய்யுட்களின் உரைகளில் பழைய உரையாசிரியர் உரைக்கு வேறுபட்ட பகுதிகள் சில இருக்கும். சில இடங்களில் அவர் இரண்டாவதாக ஓர் உரை எழுதுகிறார். அந்த உரை சிறப்பாகத் தோன்றியதால் அதையே தழுவி விளக்கம் எழுதிய சில இடங்களும் உண்டு. இதிலே வரும் மன்னர்கள், புலவர் களைப்பற்றிய செய்திகள் அனைத்தையும் தொகுத்துத் தருவ தானால் மிக விரியுமாதலால், பாட்டின் விளக்கத்துக்குப் போதிய அளவில் அவற்றைக் கொடுத்திருக்கிறேன்

Categories

License

CC BY 4.0