சிற்றிலக்கியம் - பாடல் எண்ணிக்கை அல்லது அடிகளின் எண்ணிக்கையின் அளவில் சிறியதாக அமைவதாகும். அகப்பொருள் அல்லது புறப்பொருளில் ஏதேனும் ஒரு துறையைப் பற்றி மட்டும் கூறுவதாக அமையும். (கோவை போன்ற சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு அமைவதும் உண்டு.) பாடப்பெறும் கடவுள் அல்லது மன்னன் அல்லது வள்ளல் ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக: உலா இலக்கியம் தலைவன் உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது. அறம், பொருள், இன்பம் மற்றும் வீடு எனும் நான்கு உறுதிப் பொருள்களுள் ஏதேனும் ஒன்றைப் பற்றி மட்டும் பாடுவது சிற்றிலக்கியம்.