figshare
Browse

ஆய்விதழ்கள்

Download (5.6 MB)
presentation
posted on 2025-02-19, 14:16 authored by Dr Maheswari DDr Maheswari D

ஆய்விதழ்கள்

கல்வி சார் ஆய்விதழ்கள் (Academic Journals) என்றால் என்ன?


கல்வி சார் ஆய்விதழ்கள் என்பது அறிவியல், கலை, சமூக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப போன்ற துறைகளில் அறிவியல் ஆய்வுகளை வெளியிடும் தளமாகும். இவை Print ISSN மற்றும் E-ISSN போன்ற வடிவங்களில் வெளி வருகின்றன. அவை குறித்து சில முக்கிய அம்சங்களைக் காண்போம் :


ஆய்வுகள் மற்றும் கட்டுரைகள்: கல்வியாளர்களின் ஆய்வு, கண்டுபிடிப்பு மற்றும் ஆய்வுத் தகவல்களைத் துல்லியமாக வெளிப்படுத்தும் தளமாக இவை பயன்படுகின்றன.

கட்டமைப்பு: ஆய்வுக் கட்டுரைகள் (முகவுரை, ஆய்வு முறை, முடிவுகள், விவாதம்) போன்றவற்றுடன் வெளிவருகின்றன.

துறை சார்ந்தவை: ஒவ்வொரு துறைக்கும் தனித்துவமான ஆய்வு இதழ்கள் உள்ளன (கலை, அறிவியல், மருத்துவம், தொழில்நுட்பம்).

சகமதிப்பீடு (Peer Review): வெளியிடப்படும் கட்டுரைகள் தரமான ஆய்வுகளாக இருக்கும் வகையில் துறை சார் நிபுணர்களால் மதிப்பீடு செய்யப்படுகின்றன.

சமூகத்திற்கானப் பங்களிப்பு: கல்வியாளர்களுக்குப் புதிய கண்டுபிடிப்புகளைப் பகிர்ந்து கொள்ளும் முக்கிய தளமாக விளங்குகிறது .

ஆய்விதழ்கள், உலக அளவில் அறிவியல் மற்றும் கல்வித் துறையில் கல்வியாளர்கள் மற்றும் ஆர்வலர்களின் முன்னேற்றத்திற்கும் அறிவியல் பரிமாற்றத்திற்கும் பெரிதும் பங்காற்றுகின்றன.

History

Usage metrics

    Licence

    Exports

    RefWorks
    BibTeX
    Ref. manager
    Endnote
    DataCite
    NLM
    DC